கேள்வி : பாதங் கழுவுதல் ஒரு நியமமா?
பதில் : சீடரோடு பஸ்கா பந்தியில் உட்கார்ந்திருந்த இயேசுவானவர் தாம் இருந்த இடத்திலிருந்து எழுந்து அவர்களுடைய பாதங்களைக் கழுவத்தொடங்கினார்.
அழகான இந்த அடையாளச் செயலுக்குப்பின் அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் என்னைப் போதக ரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் காலடிகளைக் கழுவி னேன் என்றால் நீங்களும் ஒருவருடைய காலடிகளை ஒருவர் கழுவவேண்டும். நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" என்றார் (யோவா 13:1-15). விசுவாசிகளில் சிலர், இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு எழுத்தின்படி யான அர்த்தம் கொடுத்து அப்பம் பிட்குமுன் பாதம் கழுவுதல் கட்டாயம் என வற்புறுத்துகின்றனர். மற்றவர் களோ இச்செயலில் ஒரு கலாச்சாரப் பழக்கத்திலிருந்து கிறிஸ்து பணியாளத் தத்துவத்தை மட்டுமே விளக்கினார் எனக் காண்கின்றனர். யார் சரி?
எகிப்து, சீரியா, பாலஸ்தீனம் போன்ற நாடு களில் மக்கள் ஒரு வீட்டிற்குள் நுழையும்போது தூசி அகற்ற தங்கள் பாதங்களைக் கழுவுவது வழக்கம் (ஆதி 18:4). வெப்ப காலத்தில் நெடுந்தூரப் பயணத்திற் குப்பின் படுக்கைக்குச் செல்லுமுன் கால்களை குளிர் நீரில் கழுவுவது புத்துணர்வூட்டுவதாக இருக்கும் (ஆதி 19:2). அது நல் வரவேற்புக்கும் ஒரு அடையாளமாக இருந்தது (ஆதி 24:31,32. 43:23,24). இக்காரியத்திற்காக தமக்குத் தண்ணீர் தரவில்லையென்று தம்மை விருந் துக்கு அழைத்திருந்த சீமோனை இயேசு மெதுவாகக் கடிந்துகொண்டார் (லூக் 7:44). இன்றும் இந்தியாவின் சில ஆதிவாசித் கிராமங்களின் நுழையும்போது அக் கிராமத்தினர் வருவோரின் கால்களில் ஊற்றத் தண்ணீர் கொண்டு வராவிடில் அக்கிராமத்திற்குள் நுழைவது பாதுகாப்பல்ல என மிஷனரிகளுக்குச் சொல்லப்படுகி றது. மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள வசதியான வீடுக ளில் இப்படித் தண்ணீர் கொடுப்பது வேலைக்காரர்தான். இயேசுவோ, "அன்பினால் ஒருவருக்கொருவர் பணியாற் றுங்கள்" எனக் கற்பித்தார் (யோவா 13:14. கலா 5:13).
ஒன்றை நியமமெனத் தீர்மானிக்க மூன்று நிபந்தனைகள் உண்டு அது (i) கிறிஸ்துவால் கட்டளை இடப்பட்டிருக்கப்பட வேண்டும் (சுவிசேஷங்கள்) (ii) ஆதிச்சபையால் செய்யப்பட்டிருக்கவேண்டும் (நடபடி கள்) (iii) அப்போஸ்தலரால் விளக்கப்பட்டிருக்க வேண் டும் (நிருபங்கள்). அப்படியானால் சபையின் நியமங்க ளெனத் தகுதிபெறுவது திருமுழுக்கும் திருவிருந்தும் தான். ஆனால் ஆராதனையிலோ, திருவிருந்து ஆராதனையிலோ, மற்றெந்தக் கூடுகையிலோ ஒருவரது பாதங்களை ஒருவர் கழுவ விசுவாசிகளுக்கு எவ்விதத் தடையுமில்லை. வாய்ப்புகிட்டும் போதெல்லாம் இதைச் செய்வது எனக்குப் பிரியம். மிஷனரிகளாகிய நாங்கள் எங்கள் சிறப்புக் கூடுகைகளில் ஒருவருக்கொருவர் காலடிகளைக் கழுவுகிறோம். இச்செயல் பொருள் நிறைந்ததாய் இருக்கிறது. ஆனால் அதை ஒரு நியம மாக வலியுறுத்த முடியாது. இயேசு பாதங்களைக் கழுவியதில் ஆன்மீக பொருளை மட்டும் கண்டு எழுத் தின்படி அதை ஒருபோதும் செய்யாதவர்கள் தவறல்ல. இவ்விதக் காரியங்களை அவரவர் விருப்பத்திற்கேற்ப விட்டுவிடுவதே முதிர்ச்சியாகும்.
"பரிசுத்த முத்தத்துடன்" ஒருவரையொருவர் வாழ்த்தும்படி புதிய ஏற்பாடு குறைந்தது ஐந்துமுறை சொல்லுகிறது (ரோம 16:16. 1கொரி 13:12. 1தெச 5:26. 1பேது 5:14). ஆனால் இந்தியாவின் பெரும் பகுதிகளில் கலாச்சாரத்திற்கு இது ஒவ்வாததால் நமது சபைகளில் இதனை செயல்படுத்துவதில்லை. வாழ்த்துதலுக்கும் வரவேற்புக்கும் அடையாளமான முத்தத்தைப்போன்றே காலடி கழுவுவதும்(லூக்.7:44,45). கலாச்சாரப் பழக்கங் களைக்குறித்துச் சண்டையிட்டு அன்பு, அங்கீகரிப்பு ஆகிய அருங்குணங்களை இழந்துவிடாதிருப்போம்!

No comments:
Post a Comment