தேவ ஆசீர்வாதமா? தேவ அங்கீகாரமா?


இன்றைய உலகில் இரண்டு ரகமான கிறிஸ்தவ விசுவாசிகள் இருக்கிறார்கள்

1) உலகப் பொருட்களின் அடிப்படையில் தேவ ஆசீர்வாதத்தை தேடுபவர்கள்.

2) தெய்வ பக்தியின் அடிப்படையில் தேவ அங்கீகாரத்தை வாஞ்சித்துத் தேடுபவர்கள்.

'ஞானஸ்நானம்" கட்டாயமா?

பதில்: ஆம். வேதம் அப்படித்தான் போதிக்கின்றது. ஞானஸ்நானமென்பது ஒரு மனிதனோ சபையோ கண்டு பிடித்ததல்ல. பிதாவாகிய தேவனே அதை நியமித்தார் (யோ1:33). குமாரனாகிய தேவன் அதைக் கட்டளையாகத் தந்தார் (மத்.28:19). ஆவியானவராகிய தேவனால் ஏவப்பட்டு அப்போஸ்தலர் அதை போதித்தனர் (அப் 2:38).

ஜெபத்தில் மனச்சிதறலை தவிர்ப்பது எப்படி?

ப: தேவனது அனைத்து போராயுதங்களையும் பயன் படுத்துவதற்கான அடிப்படை வல்லமை, ஜெபத்திலேயே உள்ளது (எபே.6:13-18). எனவே நமது முழங்கால்களை முடமாக்கவும், சிந்தையைச் சிதறடிக்கவும் சத்துரு தன்னாலான அத்தனையையும் செய்வான்.

யாரை நோக்கி ஜெபிக்க வேண்டும்?


பதில்: பரலோகத்திலிருக்கும் பிதாவை நோக்கி ஜெபிக்க வேண்டும். அப்படித்தான் இயேசு போதித்தார். 'உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு நீங்கள் ஜெபம்பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே.." (மத்.6:6,9).

அமைதியாய் ஆராதிக்க முடியாதோ?


பதில்: சத்தமாய் ஆராதிப்போரைப் பார்க்கும்போதெல்லாம் உயர் ஆங்கிலிக்கன் பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்ட எனது மனதில் இதே கேள்விதான் எழுந்தது. ஆனால் ஆராதனை குறித்த வேதப் பகுதிகளின் ஆராச்சி, சத்தத்தை உயர்த்தி தேவனைத் துதிப்பதில் தவறு இல்லை என்பதை எனக்குப் புரிய வைத்துள்ளன.

சோதனைகளை மேற்கொள்ளுவது எப்படி?


பதில்: இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் தான் பதில். எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் வென்றவர் அவரே (எபி 4:15). அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்யவல்லவரா யிருக்கின்றார் (எபி 2:18).

இரட்சிக்கப்பட்டிருக்கின்றேன் என்பதை ஒருவர் அறிய முடியுமா?

கேள்வி: இரட்சிக்கப்பட்டிருக்கின்றேன் என்பதை ஒருவர் அறிய முடியுமா?

பதில்: ஆம் இரட்சிப்பு, இன்றைய அனுபவமும் நாளைய நம்பிக்கையுமாகும். அப்போஸ்தலனாகிய யோவான் இப்படி எழுதுகின்றான். 'நாம் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். நாம் தேவனால் உண்டாயிருக்கின்றோமென்று அறிந்திருக்கின்றோம். (1யோ 3:14:519).