பதில்: பரலோகத்திலிருக்கும் பிதாவை நோக்கி ஜெபிக்க வேண்டும். அப்படித்தான் இயேசு போதித்தார். 'உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு நீங்கள் ஜெபம்பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே.." (மத்.6:6,9).
இயேசு இவ்வுலகில் இருந்த நாட்களில் சீடர்கள் எது வேண்டுமானாலும் அவரிடமே கேட்டுப் பெற்றுக் கொண்டனர். ஆனால் பெந்தேகொஸ்தேயில் தொடங்கவிருந்த புதிய யுகத்தை இயேசு சுட்டிக் காட்டி, 'அந்த நாளிலே நீங்கள் என்னிடம் ஒன்றும் கேட்கமாட்டீர்கள்.. என் நாமத்தினாலே பிதாவிடம் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரை நீங்கள் என் நாமத்தினால் ஒன்றும் கேட்கவில்லை என்றார் (யோவா.16:23,24).
ஆதிக்கிறிஸ்தவர் பிதாவை ~நோக்கி ஜெபித்தனர் (அப்.4:24-30). ~ஒரே ஆவியினாலே பிதாவிடம் சேரும் சிலாக்கியத்தை அவர் (இயேசு) மூலம் பெற்றிருக்கிறோம் என்பது அப்போஸ்தலரின் தெளிவான உபதேசம் (எபே.2:18). ~இயேசு கிறிஸ்துவின் பிதாவை நோக்கி முழங்கால் படியிடுகிறேன் என்று பவுல் தனது ஜெப அனுபவத்தைக் குறிப்பிட்டார் (எபே.3:15).
சர்வ வல்ல தேவன் நமது பரம தந்தை. கிறிஸ்துஇயேசு நமது மூத்த சகோதரன். பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தேற்றி உதவுபவர். (எபி. 2:10-12, யோவா.16:17). பிதாவை ~நோக்கி குமாரன் ~மூலம் ஆவியானவரின் ~உதவியோடு ஜெபிக்கின்றோம். திரித்துவ தேவனை அருமையாய் அறிவித்து அனுபவிப்பது ஜெபத்தில்தான்.
நமது ஜெபங்களைப் பரலோகிலிருக்கும் பிதாவுக்கு அனுப்பிவைக்கின்றோம். அவரது வலது பக்கத்தில் வீற்றிருக்கும் குமாரனானவர் நமது ஜெபங்களுக்குச் சிபரிசு செய்கிறார். இங்கு பூவுலகில் நமக்குள்ளிருக்கும் ஆவியானவர் ஜெபிக்க நமக்கு உதவுகிறார் (எபி.7:25, ரோ.8:26,34). என்னே சித்திரம்! என்னே சிலாக்கியம்
அப்படியானால் நாம் இயேசுவிடம் ஜெபிக்கவே கூடாதா? இல்லை. அவரை நோக்கிய ஜெபங்கள் வேதத்தில் உண்டு (அப்.7:59, வெளி.22:20). அவர் தேவனல்லவா? ஆனால், பிதாவை ~நோக்கி இயேசுவின் ~மூலம் ஜெபிக்க வேண்டுமென்பதே வேதத்தின் தெளிவான ~போதனை ஆகும்.
பிரியமாயிருக்கும் நெடுங்காலப் பழக்கங்களையும் வசன மார்க்கத்தாராகும்படிக் களைந்துவிடத் தயங்கக் கூடாது.
இயேசுவைத் துதிக்கலாமா? நன்றாய்த் துதிக்கலாம்: துதிக்க வேண்டும். ஆனாலும் முடிவான ஆராதனை பிதாவுக்குத்தான். (யோவா.4:23, எபே.3:20,21, 5:20, பிலி.2:11, கொலோ.1:5,13) ஆகிய வசனங்களை வாசித்துப் பாருங்கள்.
இதோ, இறுதிக் காட்சி: ~சகலமும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார் (1கொரி.15:28).
No comments:
Post a Comment