பதில்: இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் தான் பதில். எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் வென்றவர் அவரே (எபி 4:15). அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்யவல்லவரா யிருக்கின்றார் (எபி 2:18).
நாம் முதலாவது நமது உடலின் அங்கங் களை ஜீவபலியாக அவரது பீடத்தில் படைக்க வேண்டும் (ரோ12:1). நாம் நம்முடையவர்கள் அல்ல. விலைக்கு வாங்கப்பட்டோம். நாம் அவருக்கே சொந்தம். எவரையும் இச்சையோடு இனி பார்ப்ப தில்லை என்று உங்கள் கண்களோடு உடன்படிக்கை பண்ணுங்கள் (யோபு 31:1). விலக்கப்பட்டதை தொடக் கூடாதென்று உங்கள் கரங்களைக் கர்த்தருக்கு அர்ப்பணித்துவிடுங்கள். கிறிஸ்து எங்கே போகமாட் டாரோ அங்கே உங்கள் கால்களும் செல்லக்கூடாது. இப்படி ஒவ்வொன்றாய் ஒப்புக்கொடுங்கள் (ரோ 6:13). காலைதோறும் இந்த அர்ப்பணத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்குள் வாசமாயிருக்கும் கிறிஸ்துவி னாலே பாவத்திற்கு மறுப்புச் சொல்லும் வல்லமை பெறுவீர்கள். நீங்கள் கிறிஸ்துவோடு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, எழுந்திருந்து, பரமேறியுள்ளீர்களே (ரோம 6:3,4). கிறிஸ்துவோடு இவ்விதம் அடையாளப் படுத்திக் கொள்ளுதலை அடிக்கடி தியானியுங்கள். சோதனையை மேற்கொள்ள அவ்வப்போது பலம் பெற்றுக்கொள்ள கிறிஸ்து நமக்கு ஜெபிக்கப் போதித்துள்ளார். நமது மாம்சம் பலவீனமுள்ளது. நாம் விழித்திருந்து ஜெபித்தால்தான் சோதனையை மேற்கொள்வதற்கான நமது விருப்பம் நிறைவேறும் (மத் 26: 41).
கிறிஸ்து சோதிக்கப்பட்டபோது சாத்தானுக்கு எதிராக ஆவியின் பட்டயமாகிய தேவ வசனத்தைக் கைக்கொண்டார். (மத் 4:4,7,10: எபே 6:17). தவறாது வேதத்தைத் தியானியுங்கள். தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடி தாவீது அவரது வசனத்தைத் தன்னிதயத்தில் மறைத்து வைத்திருந்தான் (சங் 119:11). வசனத்தால் நிறைந்திருங்கள். சோதனையின் போது சரியான வசனத்தை ஆவியானவர் உங்களது நினைவுக்கு கொண்டுவருவார்.
தனித்திராதீர்கள். உங்களுக்கு தேவபிள்ளை களின் ஐக்கியம் தேவை. முப்புரிநூல் சீக்கிரம் அறாது (பிர:9-12).
சோதனையை மேற்கொள்ளும் போதெல்லாம் யுத்தம் வலுக்கத்தான் செய்யும். 'கெர்ச்சிக்கிற சிங்கம்" உங்களை விடமாட்டான் (1பேது 5:8). ஆனால் 'உலகிலிருப்பவனிலும் உங்களிலிருப்பவர் பெரியவர்" (1யோவா 4:4). அவரது இரத்தத்தில் அடைக்கலம் புகுந்துவிடுங்கள். அவரது கிருபையில் சார்ந்திடுங்கள். பாவம் உங்களை மேற்கொள்ளாது (ரோம 6:14)
No comments:
Post a Comment