இரட்சிக்கப்பட்டிருக்கின்றேன் என்பதை அறிய முடியுமா?
ஆம் இரட்சிப்பு, இன்றைய அனுபவமும் நாளைய நம்பிக்கையுமாகும்.
அப்போஸ்தலனாகிய யோவான் இப்படி எழுதுகின்றான். 'நாம் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். நாம் தேவனால் உண்டாயிருக்கின்றோமென்று அறிந்திருக்கின்றோம். (1யோவான் 3:14-5:19).
நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்ளும்போது தேவனது பிள்ளையாகும் உரிமை பெறுகிறீர்கள் (யோவான் 1:12) இரட்சிக்கப்படுகிறீர்கள் (அப்.16:31). உங்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படுகிறீர்கள் (வெளி.1:6). இந்தவிதமான நிச்சயத்தை உங்களுக்குத் தருபவர் பரிசுத்த ஆவியானவர். நீங்கள் தேவனுடைய பிள்ளையென அவர் உங்கள் ஆவியுடன் சாட்சி கொடுக்கின் றார் (ரோமர் 8:16). இதற்கு பிரதானமாக எழுதப்பட்ட தேவ வார்த்தையை அவர் பயன்படுத்துகின்றார் (யோவான் 20:31).
நீங்கள் இரட்சிக்கப்படும்போது தெளிவான சில அடையாளங்கள் தோன்றும். குற்ற உணர்வு அகன்று இரட்சிப்பின் மகிழ்ச்சியுண்டாகும். தேவன் மீதும் அவரது வார்த்தை மீதும் புதியதோர் நேசம் பிறக்கும். ஜெபம் இன்பமாகும். பரிசுத்தமாய் வாழ விருப்புண்டாகும். வாழ்க்கையின் நோக்கே மாறிவிடும். தேவ பிள்ளைகளோடுள்ள ஐக்கியம் இனிதாகும். பிறரது இரட்சிப்பைக் குறித்த கரிசனை உண்டாகும். இவையாவும் முழு அளவில் காணப்படாது. ஆனால் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளாய் இவைகளில் நீங்கள் வளரத் தொடங்குவீர்கள்.
இரட்சிப்பு முக்காலத்திற்குமுhpயது. கடந்த கால இரட்சிப்பு பாவத்தின் தண்டனையிலிருந்தும், நிகழ்கால இரட்சிப்பு பாவத்தின் வல்லமையிலிருந்தும் கிடைக்கும் விடுதலையாகும். எதிர்கால இரட்சிப்பு பாவத்தின் பிரசன்னத்திலிருந்தே கிடைக்கும் விடுதலையாகும். நிகழ்கால இரட்சிப்பின் அனுபவத்தில் சோதனையில்லாமல் இருக்காது. ஆகவே, சோதனை பெருகுவதைக் கண்டு கலங்கிவிடாதீர்கள். உங்களுக்கு ஏற்படும் சோதனையல்ல, அதற்கு இடங்கொடுப்பதுதான் பாவம்.
பிசாசு ஒரு பொய்யன். அவனுக்குச் செவிமடுக்காதீர்கள். ஏதோ ஒரு சோதனையில் நீங்கள் விழுந்துவிட்டால், இனி நீங்கள் தேவ பிள்ளையில்லை என்று உங்கள் காதில் ஓதுவான். சோதனையில் விழுந்தால் தேவ பிள்ளை என்ற நிலையை நீங்கள் இழந்துவிடுவதில்லை. தேவனோடுள்ள ஐக்கியம்தான் பாதிக்கப்படுகின்றது. எனவே பாவத்தை அறிக்கையிட்டு உடனே கழுவப்படுங்கள் (1யோவான் 1:7-9). நீங்கள் அவர் கையில் பாதுகாப்பாய் இருப்பீர்கள். ஒருவரும் உங்களை பறித்துக்கொண்டுபோக முடியாது (யோவான் 10:28,29).
நன்றி :ஆர்.ஸ்டான்லி

No comments:
Post a Comment