தேவன் இன்று எல்லாரையும் சுகமாக்குகின்றாரா?

கே: தேவன் இன்று எல்லாரையும் சுகமாக்குகின்றாரா?
ப: தேவன் குணமாக்குபவர். ''யேகோவா ரப்பா" என்று தம்மை வெளிப்படுத்தியுள்ளார்(யாத் 15:26). அவர் மாறவில்லை. அவரது வல்லமை குறையவில்லை.
தமது குமாரனது பூவுலக ஊழியத்தில் தேவனது குணமாக் கும் வல்லமை நிகரற்றவகையில் வெளிப்பட்டது. எல்லாவிதப் பிணியாளிகளையும் அவர் சுகப்படுத்தி னார். அவரை தொட்ட யாவரும் சுகம் பெற்றனர். ''இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்"(எபி 13:8). சிலுவையில் நமது பாவங்களை யும் ரோகங்களையும் சுமந்தார்(ஏசா 53:4,5. மத் 8:16,17) அவரது இரத்தத்தினால் கழுவப்படுகிறோம்@ அவரது தழும்புகளினால் குணமாகிறோம். சபைக்கும் குணமாக் கும் வரங்களைத் தேவன் தந்துள்ளார்(1கொரி 12:9,28).
ஆனால் நமது உடல் சாவுக்கேதுவானதே. இன்னும் நாம் மரணத்திற்கு உட்பட்டிருக்கிறோம் (1கொரி 15:26). இனி வேதனையோ துக்கமோ இல்லை எனும் அந்நாள் வரும்வரை மனிதருக்கு நேரிடும் நோய் களால் நாமும் பாதிக்கப்படலாம்(வெளி 21:4). விசுவாசியொருவன் வியாதிப்படும்போது ஜெபிக்கவேண்டும். சபையின் மூப்பர்களை வரவழைத்து 'விசுவாச ஜெபம்" ஏறெடுக்கவேண்டும். பாவமேதுமுண்டோ என்று தற்பரி சோதனை செய்யவேண்டும். பொதுவாக, அவன் சுகம் பெறுவான் (யாக் 5:14-16). ஆனால் தேவன் சுகமாக்கா மல்விடும் வேளைகளும் உண்டு. அவருக்குமுன் உத்தமமாய் நடந்தும் சுகம்பெறாத பலரை வேதம் குறிப்பிடுகிறது. பவுல் தனது ''மாம்சத்தில்" இருந்த முள்ளுடன் சமாளிக்கவேண்டியிருந்தது. போதுமான கிருபையை மட்டும் தேவன் அவனுக்களித்தார் (2கொரி 12:7-10). தீமோத்தேயுவின் வயிறு ''அடிக்கடி" பெலவீனப் பட்டது(1தீமோ 5:23). எப்பாப்பிரோத்து வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தான் (பிலி 2:25-27). அரிய அற்புதங்களைச் செய்த எலிசா தீர்க்கதரிசி வியாதியில் மரித்தான் (2ராஜா 13:14). சுகமடையாத பரிசுத்தவான் கள் சரித்திரத்தில் ஏராளம். சாகும்வரை குருடாயிருந்த ஃபேன்னி கிராஸ்பி என்ற அம்மையார் கிறிஸ்தவ உலகிற்கு 8000 பாடல்களைத் தந்துள்ளார். அதில் ஒன்றுதான் ''அருளின் மாமழை பெய்யும்" என்ற பாடல்!
நன்மையான யாவும் தேவனிடமிருந்து வருகிறது. அவர் வியாதிக்குக் காரணரல்ல. ஆனால் அவர் அதை சிட்சையின் பிரம்பாகவோ நாம் விளங்கமுடியாத ஏதோவொரு காரணத்திற்காகவோ பயன்படுத்துகிறார். அவர் சர்வவல்லவர். ஆனால் அதன்முடிவு என்னவென் றால் நன்மையோ அல்லது தீமையோ சகலமும் அவரது பிள்ளைகளுக்கு நன்மைக்கேதுவாகவே இருக்கும் (ரோ 8:28).

No comments: